Saturday, June 19, 2010

அதனாலென்ன!!

விடிய விடிய படித்தும்


விளங்காமல் போன பதிவுகள்

விடிய விடிய கேலி செய்ததே!


****


எந்த சோறும் பிடிப்பதில்லை

எங்கம்மா வடித்து

வைத்ததை தவிர


****

மலை உச்சிக்கு சென்று

உன் மடலை திறக்க நினைத்தேன்

ஏதோ ஒன்று காப்பாற்றியதே!

-----------------------------------------------------------------

38 comments:

  1. //எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர//உண்மைதான் சகோ...அழகான வரிகள்!!

    ReplyDelete
  2. இது எத்தனாவது எதிர் கவுஜ:)) ஏழுன்னு நினைக்கிறேன்:))

    ReplyDelete
  3. விடிய விடிய படித்தும்


    விளங்காமல் போன பதிவுகள்

    விடிய விடிய கேலி செய்ததே!


    ****//
    தமிழுல எழுதித் தொலைச்சாத்தான் புரிஞ்சு தொலையுமே!
    கேலி பண்ணுனா பண்ணட்டும் விடுங்க. அது நம்ம தப்பு இல்ல!



    எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர//

    அது பிரியாணியா இருக்குறதால அது பிடிப்பதில் ஒன்றும் வியப்பில்லை


    ****

    மலை உச்சிக்கு சென்று

    உன் மடலை திறக்க நினைத்தேன்

    ஏதோ ஒன்று காப்பாற்றியதே!
    //

    அங்க டவர் இருக்கா ஜமால், இல்ல அங்கயும் பைபர் ஓப்டிக் போட்டு சமிக்ஞை கொடுக்குறாங்களா?

    காப்பாத்துனது பொட்டபிராந்தா இருக்கனும் இல்லன்னா கிருட்டிண சாமியா இருக்கும்!

    ReplyDelete
  4. அன்பின் ஜமால்

    அதனாலென்ன - ஒன்றுமில்லை

    நல்வாழ்த்துகள் ஜமால்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. விடிய விடிய படித்தும்


    விளங்காமல் போன பதிவுகள்

    விடிய விடிய கேலி செய்ததே!


    ...... இப்போ என்னங்கறீங்க? ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  6. கவிதைகள் நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  7. இன்னும் யாராவது இண்டு இடுக்கில, சந்துல பொந்துல இருந்தா வந்து எதிர் கவிதை எழுதிடுங்கப்பு

    ReplyDelete
  8. நமக்குதான் சரக்கு காலினா... ஊர்ல எல்லாருக்குமே அப்படித்தானோ..

    என்னை வைச்சு இடுகை தேத்திய ஏழு பேருக்கும் வயித்தெரிச்சலுடன் கூடிய வாழ்த்துகள்....

    (போற போக்குல நானே என்னோட கவிதை(!)க்கு எதிர்கவுஜ போட்டிருவேன் போல!!!)

    ReplyDelete
  9. அது நான் படிக்கிற மூணாவது.. ஒரிஜினலையும் சேர்த்து சொன்னேன்.

    ReplyDelete
  10. சின்ன சின்னக்கவிதைகள் தான்,அதனாலென்ன ஜமால், எல்லாமே ஜோராவே இருக்கே!

    ReplyDelete
  11. ஹேய் ஜமாலு அதனாலென்ன நல்லா இருக்கு:)

    ReplyDelete
  12. //
    எந்த சோறும் பிடிப்பதில்லை
    எங்கம்மா வடித்து
    வைத்ததை தவிர
    //

    அம்மாவுக்கு ஈடு யாருமே இல்லை ஜமால் மனதை தொடும் வரிகள்!

    ReplyDelete
  13. //
    ஈரோடு கதிர் said...
    இன்னும் யாராவது இண்டு இடுக்கில, சந்துல பொந்துல இருந்தா வந்து எதிர் கவிதை எழுதிடுங்கப்பு
    //

    I like this acceptence:)

    ReplyDelete
  14. //
    விடிய விடிய படித்தும்
    விளங்காமல் போன பதிவுகள்
    விடிய விடிய கேலி செய்ததே!
    //

    ஐயோ அப்படியா ஜமால் யாரு அப்படி எழுதினாங்க :(

    ReplyDelete
  15. :-))

    மக்கா, நடத்துங்க.

    .// போற போக்குல நானே என்னோட கவிதை(!)க்கு எதிர்கவுஜ போட்டிருவேன் போல//

    :-)))))

    ReplyDelete
  16. /மலை உச்சிக்கு சென்று

    உன் மடலை திறக்க நினைத்தேன்

    ஏதோ ஒன்று காப்பாற்றியதே!//

    இது மட்டும் பிரியலீங்க..!!!

    ஓ இது தொடர் பதிவா ???? வலைக்கு நான் கொஞ்சம் புதுசுங்கோ !!!

    கவுஜ கலக்கல்.

    Call me if you find time.

    ReplyDelete
  17. இதுக்குப்பேர்தான் எதிர் கவுஜையா...

    நல்லாயிருங்க.

    நம்ம ஜமாலா இது!

    ReplyDelete
  18. வெறும் கிறுக்களோடு நிறுத்திவிட்டீர்களே அண்ணே ...

    நன்னா இருக்கு பேஷ்...

    ReplyDelete
  19. //எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர//ஆஹா...என்ன அருமை...உண்மை தான்...எங்க சமையல் தான் எனக்கு மிகவும் விருப்பம்..அதிலும் அம்மா சில சமயம் பிசைத்து கையில் கொடுப்பாங்க...அதற்கு எதுவும் ஈடுஇனை கிடையாது....

    ReplyDelete
  20. நல்ல கவிதைகள் ஜமால்..!

    ReplyDelete
  21. //எந்த சோறும் பிடிப்பதில்லை
    எங்கம்மா வடித்து
    வைத்ததை தவிர
    //

    அற்புதமான வரிகள்

    ReplyDelete
  22. //எந்த சோறும் பிடிப்பதில்லை
    எங்கம்மா வடித்து வைத்ததை தவிர/
    /
    அழகான வரிகள் Jamaal!!

    June 19, 2010 9:09 PM

    ReplyDelete
  23. விருட்ச்சத்தின் வித்து... கவிதை அருமை...

    (அதனாலென்னனு கேக்கபிடாது... ஒகே).
    :D

    ReplyDelete
  24. மத்தவங்க கருத்துரைய பாத்தா ஏதோ நடக்குதுன்னு தெரியுதுங்க....
    சரி
    கவிஞர் ஜமால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    அந்த மூனாவது கவிதை .... அலைபேசியில் கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  25. அதனாலென்ன... நல்லாருக்கு... அடுத்து யாருப்பா...

    ReplyDelete
  26. :-))
    /*எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர
    */
    வீட்ல படிக்கறதில்லைனு தைரியமோ?

    ReplyDelete
  27. //எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர//

    அதுசரி இருங்க எங்க மச்சிகிட்டபோட்டுகொடுத்துடுறேன் அப்புறம் வடிச்சியென்ன வடிக்காமலேயேகூட,,,, அதவேற என்வாயல நான் சொல்லனுமா.

    ReplyDelete
  28. "எதிர் கவுஜ" தொடரட்டும் :)

    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  29. //எந்த சோறும் பிடிப்பதில்லை

    எங்கம்மா வடித்து

    வைத்ததை தவிர//


    வீட்டுகார அம்மாக்கு விஷயம் காதில் விழுந்தது விட போகின்றது.

    ReplyDelete
  30. //போன பதிவுகள்//
    போன பதிவுகளே இப்படின்னா இனி வரப்போற பதிவுகள் என்ன செய்யப் போவுதோ..

    ReplyDelete
  31. //மலை உச்சிக்கு சென்று
    உன் மடலை திறக்க நினைத்தேன்
    ஏதோ ஒன்று காப்பாற்றியதே!//

    பலமான காற்றா இருக்குமோ?

    ReplyDelete
  32. "ரசிக்ககூடியவை சில வார்த்தைகள் புரியவில்லை"

    ReplyDelete
  33. /////*

    மலை உச்சிக்கு சென்று

    உன் மடலை திறக்க நினைத்தேன்

    ஏதோ ஒன்று காப்பாற்றியதே!/////

    திறந்திருந்தால் ஒரு உசுரோட போயிருக்கும். இப்ப பாரு எத்தனை உசுரோட விளையாடியிருக்க நீ

    ReplyDelete