Friday, May 2, 2014

பள்ளிக்கால கதைகள்

“மாப்ள! பூம்புகார் போவோமா”
“போலாம் பார்த்தி, எதுல …”
“சைக்கிள்ல தான் …”
“சரி! சாப்டுட்டு 2 மணிக்கு எல்லோரும் வந்துடுங்க”
“ஆங்! குளிக்க டிரஸ் எடுத்துட்டு வந்துடுங்கப்பா”
ஆர்வத்தோடு வீடு நோக்கி ஓடினேன், சித்தப்பா வீட்டு வாசலில் கல் தடுக்கி விழுந்தேன். நிதானம் கொள்ள சற்று நேரம் பிடித்தது. மெல்ல எழுந்து வீடு நோக்கி நடை போட்டேன் …
வீட்டினில் நுழைகையில் தங்கையின் முகத்தில் சிரிப்பு இல்லை யோசனையோடு அடுக்களை சென்றேன். அங்கே தாயின் முகத்திலும் வாட்டம் ..
15 பைசா கார்டு எடுத்து குடுத்தாங்க
மின்னலற்ற இடி ஒன்று இறங்கியது
பள்ளியிலிருந்து வந்திருந்தது
9ஆம் வகுப்பில் “FAILED”
அலமாறியை ஒட்டி மூலையில் சுவரோடு சாய்ந்து ஒடுங்கி விட்டேன். ஒரு இறுக்கமான சூழல் வீட்டின் உள்ளேயும் எனக்குள்ளேயும். அப்படியே சாய்ந்து படுத்து கொண்டேன். எம்பூட்டு நேரம் தூங்கினேனோ தெர்லை
“சாப்பிட வா!”
--------
“படிக்கிறப்பவெல்லாம் – ஒழுங்கா படிக்காம … ”
“சரி விடுங்க, சாப்பிட வா”
----------
வெட்கம் தாளவில்லை, தந்தையின் முகம் பார்க்கும் தகிரியமோ இல்லவே இல்லை. இப்படியான உணர்வுகளுக்கு இடையேயும் பூம்புகார் போலியேன்னு வருத்தம் …
கலவையான உணர்வுகளோடு விடுமுறை நாட்கள் முடிஞ்சிச்சி, பள்ளிக்கூடம் திறந்தாயிற்று. கன‌த்த இதயத்தோடு மீண்டும் 9ஆம் வகுப்பில் போய் அமர்ந்தேன். என்னையும் பெஞ்சையும் தவிர அனைவரும் மாறி இருந்தனர், கரும் பலகைக்கு கூட புது பெயிண்ட் அடித்து இருந்தார்கள். பார்வைகளில் தெரிவது கேளியா பச்சாதாபமா இன்னும் எத்தினியோ விதமான முகங்கள் ஒற்றை புன்னகையில் அவர்களை தள்ளி வைத்து பெருங்குரலெடுத்து அழுகின்றது மனம்.
முதல் வகுப்பு தமிழ், தமிழ் டீச்சர் வகுப்புக்குள் வந்து எங்களுடைய ‘குட் மார்னிங்’ வாங்கி கொண்டு அவங்களும் குட் மார்னிங்கிவிட்டு, பின் வரிசைகளில் இருக்கும் யாரையோ கை காட்டி தமிழ்நூலில் இருந்து ஒரு பாடத்தை படிக்க சொன்னார்.
டீச்சர் சொல்லி 2 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது எந்த சத்தமும் கேட்கவில்லை. கூச்சத்தினால் பெண்களின் பகுதியை திரும்பி பார்க்காத நான், ஏதோ ஒரு உந்து சக்தியில் திரும்பி பார்த்தேன். காவி உடையில் இரட்டை ஜடை தேவதை உடைத்த மடையென கண்களில் அருவி … ஒன்றும் விளங்காமல் நாங்களும் டீச்சரும். த்சோ த்சோ என்று நான் உச்சு கொட்டியதில் சக மாணவர்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர். நான் இரண்டாம் முறையாக அந்த வகுப்பில் அமர்ந்துள்ளேன் என்பதை மறக்க துவங்கினேன்.
எற்கனவே அறிமுகமான சக-மாணவர்கள் தாம் சிறிது நாட்களில் சகஜ நிலைக்கு சென்று விட்டேன்.
பள்ளியில் எலக்‌ஷன் வந்தது, நாமினேஷன் செய்யும் நாள் நான் விடுப்பு எடுத்திருந்தேன். அடுத்த நாள் சென்றவுடன் தான் அறிந்தேன் எனது பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது அதுவும் S.P.L போஸ்ட்டுக்கு. நண்பன் ரமேஷின் அன்புதான் அது.
என்னை பிடிக்காத(ஸ்கவுட் & பயாலஜி) வாத்தியாரின் மறைமுக மற்றும் நேரடி கிண்டல், இவைகளூடே தேர்தல் நாளும் நெருங்கிவிட்டது. எனக்கு எதிராக இரண்டு மாணவிகள் போட்டியில் இருந்தனர். கேன்வாசிங்குக்கு கூட போகலை நான், ஒரு வித சங்கோஜியம் தான்.
மதிய உணவு வேளை முடிந்து பள்ளிக்கு திரும்பினேன், இன்று 2:30 மணியோடு கேன்வாசிங் முடிந்தது 4:00 மணிக்கு வாக்கெடுப்புகள் நடைபெறும். ஒரு சில புது மாணாக்கர்களிடம் ஓட்டு கேட்டென், அவர்களோ எனக்கு போட இயலாதென்றும் இவருக்கு தான் என்று அவர்கள் கையில் எழுதியிருந்த எனது பெயரை காட்டினர். ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் என் ஸீட்டிற்கு சென்றேன் விட்டேன்.
ராதாவும், புதிய மாணவனான சூரஜ்(துணை எஸ்.பி.எல் போட்டியிடுபவன்)ம் தான் எனக்காகவும் கேன்வாசிங் செய்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரிய வந்தது.
ஒட்டெடுப்பு முடிந்துவிட்டது, முடிவுகள் அறிவிப்பதற்காக மாணவர்கள் அனைவரையும் விளையாட்டு மைதானத்தில் நிறுத்தியிருந்தார்கள். பரிட்சை முடிவுக்காககூட இங்ஙனம் காத்திருந்ததில்லை அது தான் எழுதும் போதே தெரிந்து விடுமே
மைதானம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த என்னை ராஜ் ஸார் கூப்பிட்டார்.
“மிட்டாய் வாங்கி வைத்து விட்டாயா”
நான் நெளிந்தேன்
“முடிவு அறிவிக்கட்டுமே ஸார்”
“நீ தான் ஜெயிப்பே! வாங்கி வா” என்றார்
பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வைத்துக்கொண்டு மைதானத்திற்கு ஓடினேன்.
நான்கு விதமான குரூப்புகள் இருந்தன எங்கள் பள்ளியில்
ரோஸ். லோட்டஸ், ஜாஸ்மின், சன்ஃப்ளவர்
தேர்தல் இக்குரூப்புகளின் தலைவர்களுக்கும், உபவுக்கும் நடந்து இருந்தன. வாக்கெடுப்பின் ரிஸல்ட் சொல்லி(க்) கொண்டிருந்தார் பிரிண்ஸிபால். அஸிஸ்டெண்ட் எஸ்.பி.எல் கூட சொல்லியாகிவிட்டது.சூரஜ் ஜெயித்திருந்தான்.
இதோ அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த எஸ்.பி.எல் முடுவு மட்டும் தான் பாக்கி. மற்ற முடிவுகளுக்கான கைத்தட்டல்கள் ஓய்ந்து இருந்தன.
15 நிமிடங்களாக ரிஸல்ட்டுகளை அறிவித்து கொண்டிருந்த பிரிண்ஸிபால், சற்றே தலை நிமிர்ந்தார் கண்ணாடியின் இடைவெளியில் எங்களை நோக்கினார். நான் ஏதோ ஒரு வரிசையின் பின்னால் பதட்டத்துடன் …

No comments:

Post a Comment