Wednesday, November 4, 2009

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு

நான் ரொம்ப கோபப்பட்றேனா?

 

என் கோபம் தவறா?

ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?

இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா.

 

இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய்.

கோபம் கொள்வது தவறேயல்ல.

கோபம் என்பது ஒரு சக்தி.

ஒறு புழுவை சிறு குச்சியால் குத்தினால் அது நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

 

வழிகள் அடைக்கபெற்ற பூனை கூட தாக்குதல் நடத்தும்.

 

செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சி உண்டு.

நாம் மனிதர்கள். நம் முன்னே நடக்கும் அக்கிரமம் பார்த்து உக்கிரம் கொள்வது தவறே அல்ல.

சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் கொண்டு செல்லகூடிய வலிமை பெற்ற ஊடக்த்தை தன் அகத்தே கொண்டிருக்கும் சினிமா துறையில்(எல்லோரும் அல்ல) சமூகத்திற்கு நலம் சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொழுதை போக்க (இப்படியே பொழுதை போக்கி கொண்டிருந்தால் எப்பொழுது வல்லரசு ஆவது) ஒரு படம் எடுத்தாலும் பரவாயில்லை.

செய்தி சொல்கிறேன் பேர்வழியென்று தனக்கு தோன்றும் (எதை வேண்டுமானலும்) ஒன்றை படம் என்று எடுத்து, கொஞ்சம் கூட பொதுநலச்சிந்தனை இல்லாமல், மனதுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய வெறும் வாய்வழிக்கூட சொல்ல லாயக்கற்ற ஒரு செய்தியை படமாக எடுத்து, மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ...

இவ்வாறாக கோபப்பட்டு கொண்டிருந்தாய். அந்த .... (சென்சார்) பயலை(இயக்குனரை) நார் நாராய் கிழிக்க வேண்டும் என்று சொன்னாய்.

பெண்னியத்தை கேவலப்படுத்திய அவனை நிக்க வச்சி சுட வேண்டும் என்று புலம்பினாய்.

இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்று ஆற்றாமை தாலாமல் அழுது தீர்த்தாய்.

செல்லச்சினுங்களாய் பட்டது உன் அழுகை

அவனை ஏதாவது செய்யேண்டா என்று உரிமையோடு முறையிட்டாய்.

அடுத்த நாள் அந்த இயக்குனருக்கு கொலை மிரட்டல் என்ற செய்தி வலையில் படித்து உனை அழைத்து சொன்னேன் மிகவும் சந்தோஷமடைந்தாய்.

இப்படியாக சமுதாய்ச்சீர்கேடு எங்கு நடந்தாலும் எவ்வாறு நடந்தாலும், நீ கோபம் கொள்கிறாய். இந்த கோபம் சரிதானா என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறாய்.

உனக்கு நான் சொல்லவதெல்லாம் இதுதான்

கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.

உணர்ச்சி அற்ற ஜடமாக உன்னை இருக்க சொல்லவில்லை.

சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.

பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

கடைசியாக உனக்கு நான் சொல்வது

 

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு