Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

 

 

மேலும் விபரங்களுக்கு

 

 

வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.

Monday, August 24, 2009

நண்பர் சிங்கைநாதனுக்காக பிரார்த்திப்போம்

 

 

 

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

 

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

 

இங்கும் பாருங்கள்

 

முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.

 

அன்புடனும் நட்புடனும் …

“And, Now…”

 

ஆச்சியின்"And, Now..."

ஆயில்யனின் "And, Now..."

நிஜம்ஸின் "And, Now..."

தமிழ் பிரியன் “And, Now..."

 

என் கிட்டே கை இருக்கு கவுனில்லே

என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே

என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே

என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே

 

 

இங்கே மக்கள் தொலைத்துவிட்ட

 

பிகரும் இங்கே தான் இருக்கு

Wednesday, August 19, 2009

நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்

புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.

நீயில்லாமல் நான்

நீரில்லாத மீன்.

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.

ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,

நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே

Friday, August 14, 2009

நட்பு - காதல்

modern-art-mexico

புகைப்படம் நன்றி

நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது