Wednesday, December 23, 2009

வேட்டைக்காரன்


சி. கருணாகரசு said...
கையில வச்சிருக்கன் வில்லு....
என்னோட மோத எவனுக்கு இருக்கு தில்லு!!

இந்த வேட்டைக்காரனின் கதை இங்கே பாருங்கள்

Monday, December 21, 2009

Large Import

நிறைய இடுக்கைகள் மற்றும் மறுமொழிகள் உள்ள வலைப்பூவினை export & importல பிரச்சனைகள் இருக்கின்றன


அதற்கான ஒரு தீர்வாக இந்த பதிவு - நான் இன்னும் முயற்சிக்கவில்லை.
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும்.

------------------------------------------------------

மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான். இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிக சமீப காலத்தில் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.
கருத்திடுங்கள் இங்கே

Friday, December 18, 2009

ஏணிப்படிகள்

இயக்குநர், அரசு பள்ளிக்கல்வித்துறையினால் வழங்கப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரிடையாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு.

குறிப்புகள் :
௧டந்த மார்ச் 2009 நடந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். மதிப்பெண் குறித்த அட்டவணை இணைத்துள்ள அறிவிப்பில் காணலாம்.

அறிவியல், வரலாறு, வணிகவியல், வொகேஷனல் என்று அனைத்து பிரிவில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி : 24 . 12 . 2009

விபரங்கள் கீழே

உடன் இதற்கான விண்ணபங்களை கீழ்க்கண்ட தமிழ்நாடு அரசு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.tn.gov.in/dge

முக்கியகுறிப்பு: இந்தப்பதிவினை படிப்பவர்கள் முடிந்தமட்டிலும் தேவைப்படுவோரிடம் பகிருங்கள்.


-------------------------------------------------------

CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS 2009

Sunday, December 13, 2009

வாழ்க்கை


என்னவென்று உணருகையில்
உன்னை வென்று சென்றிருக்கும்
--- வாழ்க்கை

Tuesday, December 8, 2009

நான் என்னை அறிந்தால்

வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன். வணக்கத்திற்குரிய வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.
ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.

ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.
ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.

இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.


மீதம் இங்கே