Wednesday, November 4, 2009

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு

நான் ரொம்ப கோபப்பட்றேனா?

 

என் கோபம் தவறா?

ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?

இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா.

 

இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய்.

கோபம் கொள்வது தவறேயல்ல.

கோபம் என்பது ஒரு சக்தி.

ஒறு புழுவை சிறு குச்சியால் குத்தினால் அது நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

 

வழிகள் அடைக்கபெற்ற பூனை கூட தாக்குதல் நடத்தும்.

 

செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சி உண்டு.

நாம் மனிதர்கள். நம் முன்னே நடக்கும் அக்கிரமம் பார்த்து உக்கிரம் கொள்வது தவறே அல்ல.

சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் கொண்டு செல்லகூடிய வலிமை பெற்ற ஊடக்த்தை தன் அகத்தே கொண்டிருக்கும் சினிமா துறையில்(எல்லோரும் அல்ல) சமூகத்திற்கு நலம் சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொழுதை போக்க (இப்படியே பொழுதை போக்கி கொண்டிருந்தால் எப்பொழுது வல்லரசு ஆவது) ஒரு படம் எடுத்தாலும் பரவாயில்லை.

செய்தி சொல்கிறேன் பேர்வழியென்று தனக்கு தோன்றும் (எதை வேண்டுமானலும்) ஒன்றை படம் என்று எடுத்து, கொஞ்சம் கூட பொதுநலச்சிந்தனை இல்லாமல், மனதுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய வெறும் வாய்வழிக்கூட சொல்ல லாயக்கற்ற ஒரு செய்தியை படமாக எடுத்து, மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ...

இவ்வாறாக கோபப்பட்டு கொண்டிருந்தாய். அந்த .... (சென்சார்) பயலை(இயக்குனரை) நார் நாராய் கிழிக்க வேண்டும் என்று சொன்னாய்.

பெண்னியத்தை கேவலப்படுத்திய அவனை நிக்க வச்சி சுட வேண்டும் என்று புலம்பினாய்.

இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்று ஆற்றாமை தாலாமல் அழுது தீர்த்தாய்.

செல்லச்சினுங்களாய் பட்டது உன் அழுகை

அவனை ஏதாவது செய்யேண்டா என்று உரிமையோடு முறையிட்டாய்.

அடுத்த நாள் அந்த இயக்குனருக்கு கொலை மிரட்டல் என்ற செய்தி வலையில் படித்து உனை அழைத்து சொன்னேன் மிகவும் சந்தோஷமடைந்தாய்.

இப்படியாக சமுதாய்ச்சீர்கேடு எங்கு நடந்தாலும் எவ்வாறு நடந்தாலும், நீ கோபம் கொள்கிறாய். இந்த கோபம் சரிதானா என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறாய்.

உனக்கு நான் சொல்லவதெல்லாம் இதுதான்

கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.

உணர்ச்சி அற்ற ஜடமாக உன்னை இருக்க சொல்லவில்லை.

சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.

பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

கடைசியாக உனக்கு நான் சொல்வது

 

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு

64 comments:

  1. :)))

    மீண்டும் வலையுலகம் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

    சீக்கிரம் ஹாஜர் அப்டேட்ஸ் போடுங்க, அதான் பக்கத்துலயே இருக்காங்கல்ல.

    ReplyDelete
  2. ஹேய் எங்கண்ணே வந்துட்டாரு...

    //அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு//

    சரி கேட்டுக்கிடுவோம்...

    ReplyDelete
  3. பிரியாமணி கோவத்துலயும் அழகா இருக்காங்க...

    ReplyDelete
  4. //கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.///

    சூப்பர்

    ReplyDelete
  5. சிம்ரன் படம் ரொம்ப சிரிசா இருக்கு தல..,

    ReplyDelete
  6. மிக நல்ல பதிவு ஜமால்....

    இதுவரைக்கும் வலைப்பக்கம் வராதா உங்கமீது எப்படி கோபப்படுவது... அளவாகவா...அல்லது அளவுமீறியா?

    ச்சும்மா

    வாங்க வாங்க .

    ReplyDelete
  7. /பிரியமுடன்...வசந்த் said...

    ஹேய் எங்கண்ணே வந்துட்டாரு.../


    Repeatttttttttttttttttttuuuuuuu

    ReplyDelete
  8. /Your comment has been saved and will be visible after blog owner approval./


    avvvvvvvvvvvvvvvv

    ReplyDelete
  9. வா மாப்ள!. தலைப்பிற்கு பொருத்தமாய் அழகான போட்டோதான் போட்டிருக்க. உள்ள என்ன விஷயம்னு பார்த்துட்டு வர்ரேன்

    ReplyDelete
  10. //கோபம் என்பது ஒரு சக்தி, சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது. பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. கடைசியாக உனக்கு நான் சொல்வது அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு//

    அழகாக, அளவோடு சொல்லி இருக்கிறாய்

    ReplyDelete
  11. மீண்டும் வருக .........வருக

    ReplyDelete
  12. இது ஜமாலோட பதிவு தானா?

    ReplyDelete
  13. //Your comment has been saved and will be visible after blog owner approval/

    ஆவ்வ்வ்வ்வ்

    ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் பார்த்த ஜமாலுக்கும், இவருக்கும் ஆறு வித்யாசம் இல்லை அறுபது இல்லை அறுநூறு இல்லை ஆறாயிரம் வித்யாசமிருக்கு....

    ReplyDelete
  14. //ஹேய் எங்கண்ணே வந்துட்டாரு...//ரீப்பிட்ட்

    அழகா சொல்லிருக்கிங்க..

    ReplyDelete
  15. //என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.//

    உண்மையான வரிகள்

    இடுகை பிடித்திருக்கு...

    ReplyDelete
  16. ஜமால் வந்தாச்சா !அப்பாடி.வாங்க வாங்க.உங்க மேல எப்பிடிக் கோவம் வரும்.இனிக் கலகலப்புத்தானே.

    ReplyDelete
  17. இன்ப அதிர்ச்சி !!!!!

    வாங்க தல !!!!!

    திரும்ப நீங்க வலையுலகத்துக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

    ஆரம்பிக்கட்டும் அதிரடி..!!!

    ஹாஜரா எப்படி இருக்காங்க‌..ஜிடாக்ல கூட ஆள காணோம்.

    ReplyDelete
  18. எந்த படம் ஜமால் அது??

    தொடர்ந்து எழுதுங்கள்...உங்க பின்னூட்டம் இல்லாம ப்லாக் களை கட்டலை..:))

    ReplyDelete
  19. சினம் தவிர்த்தல் தான் நல்லது.

    சினத்தால் உடலிலே உள்ள உயிர்ச்சக்தி
    விரைவு கொள்கிறது.குருதி அழுத்தம் ஏற்பட்டு இரத்தம்வேகம் அதிகரிக்கிற்து;
    கண்கள் சிவக்கிறது.நரம்புகளில் படபடப்பு
    ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன.
    நன்றி வேதாத்திரி மகரிஷி.

    ReplyDelete
  20. நட்புடன் ஜமால் இப்ப "மீண்டும்" ஜமால் ஆயாச்சா! இடைவெளி தொடராமல் எழுத எதிர்பார்க்கிறேன். வார்த்தைகளும் அதற்கேற்ற படங்களும் அருமை. சென்சார் விசயத்த போட்டு அதுக்கு ஒரு சென்சார் படமா?

    ReplyDelete
  21. /*று மாசத்துக்கு முன்னாடி நான் பார்த்த ஜமாலுக்கும், இவருக்கும் ஆறு வித்யாசம் இல்லை அறுபது இல்லை அறுநூறு இல்லை ஆறாயிரம் வித்யாசமிருக்கு....*/

    ennanne aachu.. ethavathu prechanaya??? :(

    padhivu nalla irundhudu na.... aana yaarukku seithi solreenga nu than puriyala :(

    ReplyDelete
  22. appuram annan sonna kettukarom alavai alagai kopa padadalam ok :)

    ReplyDelete
  23. //அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு//

    ஆஹா ஐஸ் வச்சு கிட்டே சொன்னா யார்தான் அட்வைஸ கேக்க மாட்டாங்க... :)))

    ReplyDelete
  24. நான் போஸ்டே படிக்கல போட்டோ மட்டும்தான் பாத்தேன்னு சொன்னா, நீங்க கோபப்படுவீங்களா? :-) :-)

    ReplyDelete
  25. ஜமாலின் பதிவுகள் படித்து அதிக தினங்கள் ஆகிவிட்டன.

    ம்ம். என்ன செய்வது காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் பல நிகழ்ந்து விடுகின்றன. அலுவலகத்தின் ஏற்பட்ட எக்கச்சக்க ஆண்களுடன் அலையும் நண்பரே! நீண்ட நாட்கள் கழித்து உங்களை வலையில் பார்க்கிறேன். நானும் அப்படித்தான். என்ன செய்ய??

    அப்பப்போ வந்து கொண்டிருக்கிறேன். போதும் இந்த சுயபுராணம் என்று நினைக்கிறேன் :)

    உங்கள் பதிவு அருமை. கோபத்தின் அழகை அழகாய் அக்குவேரா ஆணிவேரா பிரித்து சொல்லி இருக்கீங்க. நல்லா இருந்திச்சி படிக்க.

    கோபம் ஒரு அழகான உணர்ச்சி. அதை வெளிப்படுத்தினால்... எதிராளி மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது இல்லையா?

    அதனை வெளிப்படுத்தியவன் தப்பிச்சுடுவான்.

    ReplyDelete
  26. காக்கா இருக்கீயளா???

    ReplyDelete
  27. பதிவு நன்று ஜமால்!

    படங்களும் அருமை!

    நீங்க பிரியா(ம)ணி ரசிகர் என்று இதன் மூலம் தெரிந்து கொண்டேன்!

    :) :P

    ReplyDelete
  28. அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு"

    anna sonna piraku seiyama irpoma

    ReplyDelete
  29. நான் ரொம்ப கோபப்பட்றேனா? என் கோபம் தவறா? ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது? இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா. இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய். கோபம் கொள்வது தவறேயல்ல.

    mmmmmmmmmm ithalam naan kedathuku antha pakkam iurnthu vantha pathil

    UANKU ROMPA KOZUPU ATHIKA MAIDICHINU SOLRANGA. NAAN ITHA ENGA POI SOLRATHU ANNA

    ReplyDelete
  30. வா மச்சான்

    நான் பிளாக்கராவதற்கு முன்னே உன் பதிவுலே படித்த ஞாபகம், மீள் பதிவா
    திடீர்னு இதை மீள்பதிவா போட என்ன காரணம்? ஒன்னுமே புரியலியே

    ReplyDelete
  31. //சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.//

    ஜமால்,

    சோக்கா சொன்னீங்க ராசா. எங்கைய்யா ரொம்ப நாளா காணல்லே.?

    ReplyDelete
  32. :-) கனநாளைக்கு பிறகு...

    ReplyDelete
  33. மனையாளும் மகளும் நலமா? இனி தென்றல் வீசுமா? பதிவுலகில்.....

    ReplyDelete
  34. உங்க மேல் கோபமே வரலியே!!

    ReplyDelete
  35. வலையுலகம் அழைக்குது!!! ஜமால் வாங்க!

    ReplyDelete
  36. உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  37. என்னங்க ஆச்சு? நல்லாருக்கீங்களா?
    ஹாஜர் மற்றும் அவர் அம்மா நலமா? :)
    --வித்யா

    ReplyDelete
  38. வாங்க ஜமால், பார்த்து ரொம்ப நாளாச்சு, அழகான கோபம் தானெ, பட்டுட்டா போச்சு.

    ReplyDelete
  39. வாங்க ஜமால் வரவேற்கிறோம்.

    நல்ல பதிவு இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. இன்னாபா பதிவ காணுமே, வலையாண்ட ஆள காணுமேன்னு பார்த்தேன்...ரெம்ப கோவமா இருந்திருக்கீங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சுது... :))

    ReplyDelete
  41. நல்ல பதிவு.

    என் பிலாக்கில் உங்கள் அவார்டை பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  42. அகில உலக ப்ரியாமணி ரசிகர்கள் மன்ற தலைவர் அண்ணன் ஜமால் அவர்களே வருக...வருக...

    ReplyDelete
  43. ஹை ஜமால், உங்கள் கட்டுரை அல்ல கவிதை ரொம்ப அருமை.

    ஆனால் ஏதோ ஒன்று இடருகிறது எனக்கு,
    உங்கள் சுய முகவரியைத் தொலைத்து விட்டு,
    பொது முகவரி கிடைப்பதற்கு முயற்சி செய்வதாக‌,
    வெற்றி பெற்றுவிட்டது உங்கள் முயற்சி

    இதுவா உங்கள் இலக்கு, இதுவல்ல என்றால்
    உஙகள் திறமையை உண்மையான இலக்கிற்கு அர்ப்பணியுங்கள்
    இதுதான் எனது இலக்கு என்றால்
    தொடரட்டும் உங்கள் பயணம்

    உங்கள் வலைப்பயணம் சிறக்க‌
    அபுதாபி அமீன்

    ReplyDelete
  44. நட்புடன் ஜமால் வாங்க வந்து நான் கொடுக்கும் அவார்டை பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  45. வழிகள் அடைககப்பட்டால் பூனைகூட தாக்குதல் நடத்தும். கோபம் என்பத்ற்கு அக்றிணை, உயர்திணை கிடையாது.அழ்காய்ச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  46. பதிவின் கருத்து நன்றாக இருக்கிறது..!! ஆனா - இதுக்கு எதுக்கு பிரியாமணி..!!

    ReplyDelete
  47. அன்பின் ஜமால்

    ஹாஜர் நலமா

    சிந்தனை நன்று - அழகாய்க் கோபப்படுபவர் அளவாயும் கோபப்பட்டால் நன்று என்ற சிந்தனை பாராட்டத்தக்கது நண்பா - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  48. //
    அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு
    //
    அழகா சொன்னீங்க..

    ஆமா.. ஏன் திடீர்னு இவ்ளோ கோபம்..

    ReplyDelete
  49. ஆஹா.. உங்க போஸ்ட் என்னோட லிஸ்ட்ல தெரியறதே இல்லையே..

    இவ்ளோநாளா உங்க கடை பக்கம் வராததற்கு நெம்ப சாரிங்ணா..

    இனிமே போஸ்ட் போட்டா தவறாம வந்திடுறேன்.. அப்டி வரலைனா தயங்காம ஆட்டோ அனுப்புங்க..

    ReplyDelete
  50. எழுத்து நடை வித்தியாசமா இருக்குறாமாதிரி இருக்கே.. அண்ணாத்த.. எழுதுறதுக்கு
    பிணாமி யாராவது வெச்சிருக்கிங்களா..

    ReplyDelete
  51. அழகாய் அளவாய் கோபப்டசொல்லிக்கொடுத்திருக்கீங்க ஜமால் காக்கா..
    நல்ல அறிவுரை..


    நேரம் கிடைக்கும்போது இந்தபக்கமும் வந்து பாருங்க..

    http://niroodai.blogspot.com

    http://kalasairal.blogspot.com

    ReplyDelete
  52. ரொம்ப பயனுள்ள வரிகள்..
    நன்றி தோழரே...

    ReplyDelete
  53. எனக்குப் பிடித்ததது
    உங்கள்
    அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு

    ”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!

    என்றும் அன்புடன்,
    ஜின்னா
    I am not able to find your mail address,pleae inform me

    please visit:-பாருங்கள்

    * NIDUR SEASONS
    * nidurseasons.com
    * seasons nidur (wordpress)

    http://nidurseasons.blogspot.com/2009/12/blog-post_7715.html
    என் மீது கோபப்படாதீர்கள்

    நன்றி

    ReplyDelete
  54. ithe padicu enaku kobam kobama VARALAIYE.... :)

    :P

    nalla yosikiringa.. romba pakuvapa patutinga pole...

    ReplyDelete