Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Thursday, September 29, 2011

மெளனம் ...


தமிழ்
பிரச்சனையில்லை
ஆங்கிலம்
நோ ப்ராப்ளம்
மலையாளம்
குழப்பமில்லா
உர்தூ/ஹிந்தி
பர்வா நெய்
அரபி
மாஃபி முஷ்கில்
...
...
...

இப்படி எந்த மொழியில்
நீ சொன்னாலும்
"பரவாயில்லை" என்று
சொல்லிவிடுவேன் ...

மெளனம்
கொண்டு என்னை கொல்லாதே
மொழி பெயர்க்க தெரியாமல்
தவிக்கின்றேன் ...


Monday, April 11, 2011

தமிழக தேர்தல் 18+

தமிழக தேர்தல், என்ன முடிவெடுப்பதென்றே தெரியாத நிலையில் தான் பலர் இருப்பதாக தெரிகின்றது.
சிறு சதவிகிதம் கூட நல்லவர்கள் தென்படவில்லை.
உள்ளதுலேயே குறைந்த அளவு கெட்டவர் யார் என்று யோசித்து ஓட்டு போடும் நிலையில் நாம்.
ரொம்ப வேதனையாக இருக்கு இந்த நிலை.
போட்டி போட்டு கொண்டு நல்லது செய்யக்கூடியவர் யாருமே இல்லை.
இன்றைய வாக்காளரின் நிலை யார் வர வேண்டும் தீர்மானம் செய்வதை விட யார் வரக்கூடாது என்று தீர்மானம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இந்த இலவசங்களை நினைத்தால் இன்னும் கடும் கோபமாக வருகின்றது, இதை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்வதில்லை – இதுவும் புரியவில்லை.
வாக்காளர்களை பிச்சைகாரர்களாக்கி தான் இவர்கள் ஆட்சியில் அமரவேண்டுமா? இது ஒரு பிழைப்பா.
எவ்வளவு கோபம் வந்தாலும் விரக்தி வந்தாலும், வாக்களிப்பது நமது உரிமை என்றல்ல கடமை என்று
யாவரும் ஓட்டு போடுங்கள்.
எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா (படிவம் 17 அ) இருக்கவே இருக்கு ‘49 ஓ’.
தற்பொழுதைய நிலை இந்த ‘49 ஓ’ பகிரங்கமாகத்தான் போட முடியும்.

நல்லதொரு புதிய கட்சி விரைவில் துவங்கட்டும் என்ற பிரார்த்தனையோடு …

-----------------------

Friday, May 21, 2010

செல் போ

பொன் மாலை நேர புதனில்

செல்-போ-ன் என்று எல்லோரும் அதிகம் சொல்வதை கேட்டு எனது செல்-போ-ன் சென்றே விட்டது ...

அதே எண் வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ...

தொடர்பில் இருத்த நினைப்பவர்கள் தங்கள் தொடர்பு எண்ணை மடலிடவும் அல்லது இங்கே கமெண்ட்டில் சொல்லவும் - கமெண்ட்ஸ் வெளியிடபடமாட்டாது.

--- நன்றி ---

Wednesday, November 4, 2009

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு

நான் ரொம்ப கோபப்பட்றேனா?

 

என் கோபம் தவறா?

ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வருகிறது?

இப்பல்லாம் அடிக்கடி சீரியஸ் ஆகீரேனா.

 

இப்படியெல்லாம் என்னிடம் பற்பல முறை கேட்கிறாய்.

கோபம் கொள்வது தவறேயல்ல.

கோபம் என்பது ஒரு சக்தி.

ஒறு புழுவை சிறு குச்சியால் குத்தினால் அது நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

 

வழிகள் அடைக்கபெற்ற பூனை கூட தாக்குதல் நடத்தும்.

 

செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சி உண்டு.

நாம் மனிதர்கள். நம் முன்னே நடக்கும் அக்கிரமம் பார்த்து உக்கிரம் கொள்வது தவறே அல்ல.

சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் கொண்டு செல்லகூடிய வலிமை பெற்ற ஊடக்த்தை தன் அகத்தே கொண்டிருக்கும் சினிமா துறையில்(எல்லோரும் அல்ல) சமூகத்திற்கு நலம் சொல்லா விட்டாலும் பரவாயில்லை, பொழுதை போக்க (இப்படியே பொழுதை போக்கி கொண்டிருந்தால் எப்பொழுது வல்லரசு ஆவது) ஒரு படம் எடுத்தாலும் பரவாயில்லை.

செய்தி சொல்கிறேன் பேர்வழியென்று தனக்கு தோன்றும் (எதை வேண்டுமானலும்) ஒன்றை படம் என்று எடுத்து, கொஞ்சம் கூட பொதுநலச்சிந்தனை இல்லாமல், மனதுக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய வெறும் வாய்வழிக்கூட சொல்ல லாயக்கற்ற ஒரு செய்தியை படமாக எடுத்து, மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ...

இவ்வாறாக கோபப்பட்டு கொண்டிருந்தாய். அந்த .... (சென்சார்) பயலை(இயக்குனரை) நார் நாராய் கிழிக்க வேண்டும் என்று சொன்னாய்.

பெண்னியத்தை கேவலப்படுத்திய அவனை நிக்க வச்சி சுட வேண்டும் என்று புலம்பினாய்.

இதையெல்லாம் செய்ய முடியவில்லையே என்று ஆற்றாமை தாலாமல் அழுது தீர்த்தாய்.

செல்லச்சினுங்களாய் பட்டது உன் அழுகை

அவனை ஏதாவது செய்யேண்டா என்று உரிமையோடு முறையிட்டாய்.

அடுத்த நாள் அந்த இயக்குனருக்கு கொலை மிரட்டல் என்ற செய்தி வலையில் படித்து உனை அழைத்து சொன்னேன் மிகவும் சந்தோஷமடைந்தாய்.

இப்படியாக சமுதாய்ச்சீர்கேடு எங்கு நடந்தாலும் எவ்வாறு நடந்தாலும், நீ கோபம் கொள்கிறாய். இந்த கோபம் சரிதானா என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொள்கிறாய்.

உனக்கு நான் சொல்லவதெல்லாம் இதுதான்

கோபம் என்பது ஒரு சக்தி, கோபம் என்பது ஒரு உணர்ச்சி.

உணர்ச்சி அற்ற ஜடமாக உன்னை இருக்க சொல்லவில்லை.

சக்தி என்பது எரிபொருள் போன்றது, அதை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதும் அழிவுக்கு பயன்படுத்துவதும் உன் கையில் தான் உள்ளது.

பல சமயங்களில் உணர்ச்சிகளை உடன் வெளி காட்டாமல் இருப்பதுதான் உனக்கும் உன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

கடைசியாக உனக்கு நான் சொல்வது

 

அழகாய் கோபப்படுகிறாய் அளவாய் கோபப்படு