Monday, October 17, 2011

பதிவுலக தோழமைகளே

அன்பு பதிவுலக தோழமைகளே இந்த கோரிக்கையை உங்களிடமும் வைக்கிறேன்.

சாதி, சமயங்கள், கட்சிகள், நிறங்கள் தாண்டி மொழி கொண்டு நாம் ஒன்றாக நடைப்போட்டு கொண்டிருக்கிறோம். சின்ன சின்னதாக புரிதல்களில் அங்கங்கே அவ்வப்போது தென்பட்டாலும் நாம் கொண்ட இணைய நட்புக்கு பங்கம் வந்ததில்லை. பதிவின் மூலமாக அறிமுகமாகி சகோதரன், சகோதரி, மாமன், மச்சான் என்ற உறவே இங்கே பலமாக இருக்கின்றது, பதிவுலகை விட்டு வெளியாக பல காலங்கள் ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் உண்டு, இது வரை முகம் காணாத சொந்தங்கள் இங்கு நிறைய உண்டு. எனக்கு அதிகம் எழுத தெரிந்ததில்லை ஆனால் பலரோடு நட்பு கொண்டிருக்கிறேன் இந்த இணைய உலகத்தில்.

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேல் தமிழ்மணத்தில் இணைந்ததில்லை, இன்று வரை தமிழ்மணம் முகப்பை பார்த்து பதிவுகளுக்கு செல்வதில்லை, எப்பொழுதுமே கூகில் ரீடரில் படித்து தான் பதிவுகளுக்கு செல்வதுண்டு, இந்த ஓட்டு, ஓட்டு பட்டை இதன் மீதான துவக்க மோகம் எப்பொழுதோ சென்று விட்டது. எல்லா திரட்டிகளுமே வியாபார நோக்கம் கொண்டதாகத்தான் நான் நினைக்கின்றேன், ஆனால் எல்லா ப்லாக்குகளும் அங்கனம் கிடையாது. ஓட்டு பட்டை இணைப்பிதில் நிச்சியம் திரட்டிகளுக்கே இலாபம் அதிகம், பதிவர்களுக்கு பிரபலம் மட்டுமே கிடைக்கின்றது, ஓட்டு பட்டை இல்லாமலும் அதை அடைய முடியும்.

தமிழ்மணம் இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது, அது அவர்கள் இஷ்டம் - அவர்களின் கட்டுப்பாடுகளோடு தொடர்வதும் தொடராமல் இருப்பதும் நமது இஷ்டம்.

ஆனால், தனிமனித தாக்குதலோ ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களை தாக்கும் விதமாக பேசுவதோ ஒரு பொது தளத்திற்கு அழகல்ல.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கொண்டுள்ளவர்களின் மனம் புண்படும்படியாக தமிழ்மண நிர்வாகி நடந்துள்ளார். “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்பது யாரையும் புண்படுத்தாத முகமன் இதனை கேலிக்குள்ளாக்கியுள்ளார், மேலும் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது


-------------------------



சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.


"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.


இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.


அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).


இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.


தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக  தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

------------------------

இது நான் தோழமையாக பாவிக்கும் எல்லோரிடமும் கேட்டு கொள்கிறேன், இது முஸ்லீம்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கருதாமல், உங்களுடைய எதிர்ப்புகளையும் பதிவு செய்யுங்கள்.

நன்றி.


17 comments:

  1. கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!

    தனிநபராக மட்டுமின்றி தமிழ்மண நிர்வாகியாகவும் வருத்தத்தைத் தெரிவித்து பரிகாரத்தை அவர் தேடிக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஜமால்,

    ///தமிழ்மணம் இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது, அது அவர்கள் இஷ்டம் - அவர்களின் கட்டுப்பாடுகளோடு தொடர்வதும் தொடராமல் இருப்பதும் நமது இஷ்டம்.///---மிகச்சரியே..!

    இன்னும், ஆபாச அருவருக்கத்தக்க வசைச்சொற்கையும், ஏச்சு பேச்சுக்களையும் பொறுத்துக்கொண்டு இனி அங்கே எவராலும் இருக்க இயலாது.



    "மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!"

    மனம்வருந்தி...
    பகிரங்கமாக...

    ReplyDelete
  3. தமிழ் மணத்திற்கு என்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன். சம்பந்தமே இல்லாமல் உளறி இருக்கிறார்.
    முதலில் எனக்கு அந்த விவாதத்தை பாலோவ் செய்த போது டக் என்று ஸ்ட்ரைக் ஆகவில்லை. இது நிச்சயம்
    உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டதே.வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    ReplyDelete
  4. வரவேற்கிறேன் சகோ.! தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

    ReplyDelete
  5. என் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. Click the link below and read.

    1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

    .

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஜமால்

    தெளிவான விளக்கங்கள். என்னோட கண்டனமும் உண்டு. தமிழ்மணம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. //இது நான் தோழமையாக பாவிக்கும் எல்லோரிடமும் கேட்டு கொள்கிறேன், இது முஸ்லீம்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கருதாமல், உங்களுடைய எதிர்ப்புகளையும் பதிவு செய்யுங்கள்.//

    ஒரு இஸ்லாமியரிடம் சென்று சிவனின் நல்லருள் கிட்டட்டும் என்று கூறினால் அவர் ஏற்றுக் கொள்வாரா ? ஓரிறை கொள்கையாளருக்கு பிற கடவுளின் ஆசிக் கிட்டட்டம் என்று கூறுவது எவ்வளவு உவர்பானதோ அதே தான் கடவுள் நம்பிக்கையற்றவரிடம் சென்று இறைவனின் சாந்தி சமாதானம் உங்களுக்கு கிட்டட்டும் என்று கூறுவதும். தமிழ்மணம் தங்களை எந்த மதத்தையும் சார்ந்தவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை என்றே நினைத்து பெயரிலியின் அந்த பதிலை நான் கொள்கிறேன்.

    சாந்தியும் சமாதானமும் அக்கா தங்கைகள் என்று சொல்வதால் ஏதேனும் நட்டமா ?

    பொதுவாக நம்பிக்கைகளை குழுவிற்குள், மதத்திற்குள் வைத்துக் கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது.

    நண்பர்கள் கூகுள் பஸ்ஸில் இந்த இடுகை பற்றி பகிர்ந்ததால் எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  9. தமிழ்மணமே மன்னிப்புகேள்


    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

    ReplyDelete
  10. சாதி, மதங்களைத்தாண்டி அனைவரும் ஒன்றாக இணைந்திருப்போம்... கருத்துரைகளை இடும்போது அடுத்தவர்களின் மனம் நோகாதபடி இடுவது நல்லது. இல்லையேல் கருத்தரையே இடவேண்டாம் என்பது என்கருத்து.

    ReplyDelete
  11. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் கண்டனங்கள்...

    ReplyDelete
  12. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் கண்டனங்கள்...

    ReplyDelete
  13. மன்னிப்புக்கோரினால் "தரம்" தாழ்ந்து விடுமே?எதையோ நினைத்து எதையோ இடித்துக் கொண்டிருக்கிறார்கள்,சகோ!பார்க்கலாம் எத்தனை நாளைக்கென்று!

    ReplyDelete
  14. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் கண்டனங்கள்...

    ReplyDelete
  15. @கோவிகண்ணன்

    //சாந்தியும் சமாதானமும் அக்கா தங்கைகள் என்று சொல்வதால் ஏதேனும் நட்டமா ?//

    இப்படி சொன்னா தப்பேயில்லை

    //"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"//

    இப்படி சொன்னா பெரிய தப்பு.

    ReplyDelete
  16. சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணம் நமக்கு வேண்டவே வேண்டாம்

    ReplyDelete