
புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்.

நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்.

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.
ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,
நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,
அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்
எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,
நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே