சுறாக்களில் ஏறத்தாழ 300 வகைகள் உள்ளன, இவற்றில் 30 வகைகளே மனிதனை தாக்கக்கூடியவை.
இராட்ச சுறாக்களுக்கு 3000 பற்கள் வரை உண்டு.
சுறாவின் பற்களுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, முன் வரிசையில் உள்ள பற்கள் உடைந்து விட்டால் சுழற்சி முறையில் பின் பகுதியில் உள்ள பற்கள் முன்னே வந்து விடும்.
சுறாக்களின் எலும்பு எளிதில் வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனவை.
இவைகளின் மோப்ப சக்தி மிகச்சிறந்த ஒன்றாகும். 10இலட்சம் நீர்த்துளிகளில் ஒரே ஒரு இரத்த துளி இருந்தாலும் கால் மைல் தூரத்தில் இருந்தே இவைகளால் முகர்ந்து விட இயலும்.
மெகலோடான் என்பவை மிகப்பெரிய சுறாவாக கருதப்படுகிறது.
இவ்வினம் தற்பொழுது இல்லை சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப்படுகின்றது.
நன்றி விக்கிபீடியா.
மீன் வகைகள் தமிழில்