Monday, April 11, 2011

தமிழக தேர்தல் 18+

தமிழக தேர்தல், என்ன முடிவெடுப்பதென்றே தெரியாத நிலையில் தான் பலர் இருப்பதாக தெரிகின்றது.
சிறு சதவிகிதம் கூட நல்லவர்கள் தென்படவில்லை.
உள்ளதுலேயே குறைந்த அளவு கெட்டவர் யார் என்று யோசித்து ஓட்டு போடும் நிலையில் நாம்.
ரொம்ப வேதனையாக இருக்கு இந்த நிலை.
போட்டி போட்டு கொண்டு நல்லது செய்யக்கூடியவர் யாருமே இல்லை.
இன்றைய வாக்காளரின் நிலை யார் வர வேண்டும் தீர்மானம் செய்வதை விட யார் வரக்கூடாது என்று தீர்மானம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இந்த இலவசங்களை நினைத்தால் இன்னும் கடும் கோபமாக வருகின்றது, இதை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்வதில்லை – இதுவும் புரியவில்லை.
வாக்காளர்களை பிச்சைகாரர்களாக்கி தான் இவர்கள் ஆட்சியில் அமரவேண்டுமா? இது ஒரு பிழைப்பா.
எவ்வளவு கோபம் வந்தாலும் விரக்தி வந்தாலும், வாக்களிப்பது நமது உரிமை என்றல்ல கடமை என்று
யாவரும் ஓட்டு போடுங்கள்.
எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா (படிவம் 17 அ) இருக்கவே இருக்கு ‘49 ஓ’.
தற்பொழுதைய நிலை இந்த ‘49 ஓ’ பகிரங்கமாகத்தான் போட முடியும்.

நல்லதொரு புதிய கட்சி விரைவில் துவங்கட்டும் என்ற பிரார்த்தனையோடு …

-----------------------

8 comments:

  1. யாவரும் ஓட்டு போடுங்கள்.
    எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா (படிவம் 17 அ) இருக்கவே இருக்கு ‘49 ஓ’.
    தற்பொழுதைய நிலை இந்த ‘49 ஓ’ பகிரங்கமாகத்தான் போட முடியும்.

    நல்லதொரு புதிய கட்சி விரைவில் துவங்கட்டும் என்ற பிரார்த்தனையோடு …


    ....good message.

    ReplyDelete
  2. தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்

    ஏ. சுப்பராயலு 17 டிசம்பர், 1920 11 ஜூலை, 1921

    பனகல் ராஜா 11 ஜூலை, 1921 3 டிசம்பர், 1926

    பி. சுப்பராயன் 4 டிசம்பர், 1926 27 அக்டோபர், 1930

    பி. முனுசுவாமி நாயுடு 27 அக்டோபர், 1930 4 நவம்பர், 1932

    ராமகிருஷ்ண ரங்காராவ் 5 நவம்பர், 1932 4 ஏப்ரல், 1936

    பி. டி. இராஜன் 4 ஏப்ரல், 1936 24 ஆகஸ்டு, 1936

    ராமகிருஷ்ண ரங்காராவ் 24 ஆகஸ்டு, 1936 1 ஏப்ரல், 1937

    கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1 ஏப்ரல், 1937 14 ஜூலை, 1937

    சி. இராஜகோபாலாச்சாரி 14 ஜூலை, 1937 29 அக்டோபர், 1939

    த. பிரகாசம் 30 ஏப்ரல், 1946 23 மார்ச்சு, 1947

    ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23 மார்ச்சு, 1947 6 ஏப்ரல், 1949

    பூ. ச. குமாரசுவாமி ராஜா 6 ஏப்ரல், 1949 26 ஜனவரி, 1950

    பி. எஸ். குமாரசுவாமிராஜா 26 ஜனவரி, 1950 9 ஏப்ரல், 1952

    சி. இராஜகோபாலாச்சாரி 10 ஏப்ரல், 1952 13 ஏப்ரல், 1954

    கே. காமராஜ் 13 ஏப்ரல், 1954 31 மார்ச்சு, 1957

    கே. காமராஜ் 13 ஏப்ரல், 1957 1 மார்ச்சு, 1962

    கே. காமராஜ் 15 மார்ச்சு, 1962 2 அக்டோபர், 1963

    எம். பக்தவத்சலம் 2 அக்டோபர், 1963 6 மார்ச்சு, 1967

    சி. என். அண்ணாத்துரை 6 மார்ச்சு, 1967 ஆகஸ்டு, 1968

    சி. என். அண்ணாத்துரை ஆகஸ்டு, 1968 3 பிப்ரவரி, 1969

    நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) 3 பிப்ரவரி, 1969 10 பிப்ரவரி, 1969

    மு. கருணாநிதி 10 பிப்ரவரி, 1969 4 ஜனவரி, 1971

    மு. கருணாநிதி 15 மார்ச்சு, 1971 31 ஜனவரி, 1976

    குடியரசுத் தலைவராட்சி 31 ஜனவரி, 1976 30 ஜூன், 1977

    எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980

    குடியரசுத் தலைவர் ஆட்சி 17 பிப்ரவரி, 1980 9 ஜூன், 1980

    எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984

    எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987

    நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988

    ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988

    குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1988 27 ஜனவரி, 1989

    மு. கருணாநிதி 27 ஜனவரி, 1989 30 ஜனவரி, 1991

    குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1991 24 ஜூன், 1991

    ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996

    மு. கருணாநிதி 13 மே, 1996 13 மே, 2001

    ஜெ. ஜெயலலிதா 14 மே, 2001 21 செப்டம்பர், 2001

    ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002

    ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006

    மு. கருணாநிதி 13 மே, 2006 பதவியில் உள்ளார்.

    புதிய கட்சி விரைவில் துவங்கட்டும் என்ற பிரார்த்தனையோடு.....

    ReplyDelete
  3. நல்லாச்சி மலர இறைவன் துணையிருப்பான்

    ReplyDelete
  4. அனைவரும் வோட்டு போடுங்க...நல்ல ஆட்சி அமைய வேண்டும்..

    ReplyDelete
  5. நல்லாச்சி அமைய வேண்டும்
    ஆமீன்..

    ReplyDelete
  6. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  7. இலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை கருணாநிதி இந்த தேர்தல் தோல்வி மூலம் உணர்ந்து கொள்ளவிருக்கிறார். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்

    நல்லையா தயாபரன்

    ReplyDelete
  8. உங்களை வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கேன்
    நேரம் கிடைக்கும் போது
    பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_09.html

    ReplyDelete