Friday, November 4, 2016
Wednesday, September 14, 2016
Thursday, June 9, 2016
நீ
என் எழுத்துகளை
எனக்கே அறிமுகம் செய்தவள் நீ
.
காணல் காட்டில்
நீருற்றாய் வந்தவள் நீ
.
உறைந்து கிடந்த
உவப்பற்றவைகளுக்கு உயிரூட்டி
உட் கொண்டவள் நீ
.
செரிக்கும் முன்
அத்தனையையும் மரிக்க செய்தவள் நீ
.
சுமைகளை
குறைத்து என்னை இறகாக்கியவள் நீ
.
தாயாய்
முந்தானை தந்தவள் நீ
.
தந்தையாய்
கற்று தந்தவள் நீ
.
சகோதரணாய், சகோதரியாய்
பாதுக்காத்தவள் நீ
.
தோழனாய், தோழியாய்
அன்பை தந்தவள் நீ
.
எல்லாமுமாய் தான் இருக்கிறாய்
.
கடந்து
விட்ட குழந்தை தன்மையை
மீட்டி கொண்டவள் நீ
.
எனக்குமே காட்டி தந்தவள் நீ
.
இன்னும்
எத்தனையோ இருக்கு சொல்ல
வார்த்தைகள் கோர்த்துகொள்ளும் மெல்ல ...
.
#கிறுக்கல்கள்
---------------------------------------------------------------------------------------------
Saturday, May 3, 2014
பள்ளிக்கால கதைகள்
வானிலை அறிக்கை
ஒரு வார காலமாக பெய்து கொண்டிருக்கும் மழை இன்று வராது, வானம் வறண்ட
நிலைகொண்டிருக்கும்.
கிழக்கு பக்கம் உள்ள பள்ளிக்கூடங்களில் 10 மணி முதல் சில நிலவுகள் காட்சி தரலாம்
மணி 7 தாண்டியாச்சு 11ஆவது படிக்கிற புள்ள இன்னும் தூங்கறது பாரு”
“எந்திரி! எந்திரி!”
“ஆஹா! வழமை போலவே நேரம் ஆகிவிட்டதே!”
வேகமா எழுந்து குளியலறைக்குள் தாழிட்டு கொள்ளாமல் பல் துலப்பானில்
கோல்கேட்டை நிரப்பி, துவாலையும் கைலியும் எடுத்து கொண்டு
காவேரியை நோக்கி ...
வாரம் முழுதும் விடாமல் பெய்து கொண்டிருந்த மழையால் பள்ளிகளுக்கு விடு
முறை விட்டனர் அதுவும் 9:30 மணியளவில் பள்ளிக்கு வந்து முதல் வகுப்பு
நிறைவடைந்த பின் விடுப்பு.
விடுமுறை பள்ளிக்குதான் விட்டார்கள்
மழையுமல்லவா விடுப்பு எடுத்து கொண்டது.
வலிமையான கரங்களை நிறுத்தி கொண்டு, மெல்ல தூறலானது
“டேய்! கிருபா புதுப்படம் வந்திருக்குடா - போலாமா!”
“ஹைய்யா! போலாம் போலாம்”
“ஜே! எங்கேடா”
“கணினி லேபில் சார் கூட பேசிகிட்டு இருக்காண்டா”
வகுப்பறையை தவிர மற்ற இடங்களில் நண்பர்களாக பழகும் சீனி மற்றும் R.V.K
சாருடன் பேசி கொண்டிருந்தேன்
“என்ன சார்! ஸ்கூலு விட்டவொன்னே மழையும் விட்டுடுச்சி, போர் அடிக்குமே!”
“R.V.K படத்துக்கு போகலாமா”
“போகலாம் சீனி - ஜே! நீயும் வர்றியா”
“R.V.K அவங்க போகட்டும், நாம் டீச்சர்ஸா போவோம்”
அதுக்குள்ளே கிருபாசங்கர் என்ற கிருபா அங்கே வந்தான்
“சார்! மே ஐ கம் இன்”
“வா! வா! என்ன கிருபா படத்துக்கா”
“ஆமாம் சார்”
“என்ன படம்”
“வைகாசி பொறந்தாச்சி”
“அதுதான் வருசா வருசம் பொறக்குதேடா - சரி சரி நீங்க கிளம்புங்க, R.V.K
நாம வேற படத்துக்கு போவோம்”
ஆங்காங்கே குழுக்களாக பேசி கொண்டிருந்தனர் மாணவர்கள்.
பெரும் பாலான மாணவிகள் சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.
“செந்தில் - எவ்வளவு பணம் இருக்கு, யார் யார் வாறாங்க”
“15 பேராவது வருவாங்கடா, பணம் அவ்வள ...”
“சரி நீங்க எல்லோரும் தியேட்டர் போயிடுங்க நான் சிராஜ் அண்ணன் கிட்ட பணம்
வாங்கிட்டு வந்துடறேன் - பியர்லஸ் தானே”
“ஆமா மாப்ள”
“சாதிக் வர்றான்ல”
“வர்றேன் மாப்ள- டிக்கெட் எடுக்கனும் - அதானே”
மழை தூறலை இரசித்தபடியே வேகமாக பஸ் ஸடாண்ட் நோக்கி நடந்தேன். P.U.P
டைலர்ஸில் தான் அண்ணன் இருக்கும் இச்சமயத்தில்.
சற்று தூரம் கடந்தவுடன் அட! அதோ அண்ணன் இப்பதான் போறாங்க போல
“சிராஜ்! சிராஜ்!”
“என்ன ஜே! இந்த நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டுட்டாங்களா”
“ஆமாண்ணே! பசங்க எல்லாம் படத்துக்கு போ ...”
“ம்ம்ம் ... எவ்வளவு வேணு... சரி இந்தா 100 ரூவா! போதுமா”
“ஹி ஹி, போதும் அண்ணே நேரம் ஆகுது நான் வர்றேன்”
“சாப்பிட வருவியா”
“எடுத்துட்டு வந்த சாப்பாடு இருக்கு, படம் முடிந்தவுடன் குத்தாலம் போய்டுவேன்”
“ம்ம்ம் ... சரி”
பசங்க இன்னும் கிளம்பி இருக்க மாட்டாங்க என நினைத்து கொண்டு பள்ளி நோக்கி
வேக நடை போட்டேன்.
S.T.Pauls பள்ளியை கடந்த பின் தினமும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது யாரோ
தன்னை கவனிப்பது போல் தோன்றும் அது போலவே அப்பவும் தோன்றியது.
மெல்ல திரும்பி பார்த்தேன்
சென்ற வாரம் தொலைக்காட்சியில் பார்த்த மிருதங்க சக்கரவர்த்தி மனதிலே
ஆவர்த்தனம் செய்தார்
இது என்ன இன்று
மேகம் கறுத்து இருப்பதால்
பகலில் நிலவு முகம் காட்டுகிறதோ
வானம் மழை நீரை மட்டுமல்லாது
ஒரு
தேவதையையும் தரைக்கு இறக்கிவிட்டிருந்தது
தேவதையின் கையில் ரோஜா
அட இதென்ன கருப்பு ரோஜா
அதுவும் இத்தனை பெரிதாக
ஓஹ்! குடையா.
கார்மேகமென நினைத்து
கூந்தலுக்குள் ஒளிந்து கொள்ள
இடம் தேடின தூறல்கள்
என் பார்வையில்
உருகி கொண்டிருந்த தேவதையை
மேலும் நினைய விடாமல்
போர் செய்து கொண்டிருந்தது அந்த குடை
“மழையா இருக்கே குடை தாறியளா”
“இந்தாங்க தாராளமா எடுத்துக்கோங்கோ”
இவை எங்களின் மனக்குரல்கள்
பேசிக்கொள்ளும் தூரத்தில் நாங்கள் இல்லை
சாலைகளின் எதிர் திசையினில் இருந்தோம்.
வில்லன்களாக பேருந்துகள் குறுக்கே சென்ற வண்ணம் இருந்தன, உபரியாக
சத்தமிட்டு ஹாரனித்தன
நான் கைநீட்டி கேட்பதுபோல் சைகை செய்ய
தேவதை எடுத்துகொள் என்று கருப்பு ரோ ... ச்சே ச்சே குடையை நீட்டியது
சந்தோஷப்பூக்கள் மனமெங்கும் பரவ
புன்னகையாக உதடு வழி வெளி வந்தது.
தலையை சிலிப்பிகொண்டு பள்ளியை நோக்கி வேக நடை போட்டேன் ...
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் நிறைந்த ஓவியமோ!
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் ...
பாடல் காற்று வழி தவழ்ந்து வந்தது ...

Friday, May 2, 2014
பள்ளிக்கால கதைகள்
“மாப்ள! பூம்புகார் போவோமா”
“போலாம் பார்த்தி, எதுல …”
“சைக்கிள்ல தான் …”
“சரி! சாப்டுட்டு 2 மணிக்கு எல்லோரும் வந்துடுங்க”
“ஆங்! குளிக்க டிரஸ் எடுத்துட்டு வந்துடுங்கப்பா”
ஆர்வத்தோடு வீடு நோக்கி ஓடினேன், சித்தப்பா வீட்டு வாசலில் கல் தடுக்கி விழுந்தேன். நிதானம் கொள்ள சற்று நேரம் பிடித்தது. மெல்ல எழுந்து வீடு நோக்கி நடை போட்டேன் …
வீட்டினில் நுழைகையில் தங்கையின் முகத்தில் சிரிப்பு இல்லை யோசனையோடு அடுக்களை சென்றேன். அங்கே தாயின் முகத்திலும் வாட்டம் ..
15 பைசா கார்டு எடுத்து குடுத்தாங்க
மின்னலற்ற இடி ஒன்று இறங்கியது
பள்ளியிலிருந்து வந்திருந்தது
9ஆம் வகுப்பில் “FAILED”
அலமாறியை ஒட்டி மூலையில் சுவரோடு சாய்ந்து ஒடுங்கி விட்டேன். ஒரு இறுக்கமான சூழல் வீட்டின் உள்ளேயும் எனக்குள்ளேயும். அப்படியே சாய்ந்து படுத்து கொண்டேன். எம்பூட்டு நேரம் தூங்கினேனோ தெர்லை
“சாப்பிட வா!”
--------
“படிக்கிறப்பவெல்லாம் – ஒழுங்கா படிக்காம … ”
“சரி விடுங்க, சாப்பிட வா”
----------
வெட்கம் தாளவில்லை, தந்தையின் முகம் பார்க்கும் தகிரியமோ இல்லவே இல்லை. இப்படியான உணர்வுகளுக்கு இடையேயும் பூம்புகார் போலியேன்னு வருத்தம் …
கலவையான உணர்வுகளோடு விடுமுறை நாட்கள் முடிஞ்சிச்சி, பள்ளிக்கூடம் திறந்தாயிற்று. கனத்த இதயத்தோடு மீண்டும் 9ஆம் வகுப்பில் போய் அமர்ந்தேன். என்னையும் பெஞ்சையும் தவிர அனைவரும் மாறி இருந்தனர், கரும் பலகைக்கு கூட புது பெயிண்ட் அடித்து இருந்தார்கள். பார்வைகளில் தெரிவது கேளியா பச்சாதாபமா இன்னும் எத்தினியோ விதமான முகங்கள் ஒற்றை புன்னகையில் அவர்களை தள்ளி வைத்து பெருங்குரலெடுத்து அழுகின்றது மனம்.
முதல் வகுப்பு தமிழ், தமிழ் டீச்சர் வகுப்புக்குள் வந்து எங்களுடைய ‘குட் மார்னிங்’ வாங்கி கொண்டு அவங்களும் குட் மார்னிங்கிவிட்டு, பின் வரிசைகளில் இருக்கும் யாரையோ கை காட்டி தமிழ்நூலில் இருந்து ஒரு பாடத்தை படிக்க சொன்னார்.
டீச்சர் சொல்லி 2 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது எந்த சத்தமும் கேட்கவில்லை. கூச்சத்தினால் பெண்களின் பகுதியை திரும்பி பார்க்காத நான், ஏதோ ஒரு உந்து சக்தியில் திரும்பி பார்த்தேன். காவி உடையில் இரட்டை ஜடை தேவதை உடைத்த மடையென கண்களில் அருவி … ஒன்றும் விளங்காமல் நாங்களும் டீச்சரும். த்சோ த்சோ என்று நான் உச்சு கொட்டியதில் சக மாணவர்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர். நான் இரண்டாம் முறையாக அந்த வகுப்பில் அமர்ந்துள்ளேன் என்பதை மறக்க துவங்கினேன்.
எற்கனவே அறிமுகமான சக-மாணவர்கள் தாம் சிறிது நாட்களில் சகஜ நிலைக்கு சென்று விட்டேன்.
பள்ளியில் எலக்ஷன் வந்தது, நாமினேஷன் செய்யும் நாள் நான் விடுப்பு எடுத்திருந்தேன். அடுத்த நாள் சென்றவுடன் தான் அறிந்தேன் எனது பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது அதுவும் S.P.L போஸ்ட்டுக்கு. நண்பன் ரமேஷின் அன்புதான் அது.
என்னை பிடிக்காத(ஸ்கவுட் & பயாலஜி) வாத்தியாரின் மறைமுக மற்றும் நேரடி கிண்டல், இவைகளூடே தேர்தல் நாளும் நெருங்கிவிட்டது. எனக்கு எதிராக இரண்டு மாணவிகள் போட்டியில் இருந்தனர். கேன்வாசிங்குக்கு கூட போகலை நான், ஒரு வித சங்கோஜியம் தான்.
மதிய உணவு வேளை முடிந்து பள்ளிக்கு திரும்பினேன், இன்று 2:30 மணியோடு கேன்வாசிங் முடிந்தது 4:00 மணிக்கு வாக்கெடுப்புகள் நடைபெறும். ஒரு சில புது மாணாக்கர்களிடம் ஓட்டு கேட்டென், அவர்களோ எனக்கு போட இயலாதென்றும் இவருக்கு தான் என்று அவர்கள் கையில் எழுதியிருந்த எனது பெயரை காட்டினர். ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் என் ஸீட்டிற்கு சென்றேன் விட்டேன்.
ராதாவும், புதிய மாணவனான சூரஜ்(துணை எஸ்.பி.எல் போட்டியிடுபவன்)ம் தான் எனக்காகவும் கேன்வாசிங் செய்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரிய வந்தது.
ஒட்டெடுப்பு முடிந்துவிட்டது, முடிவுகள் அறிவிப்பதற்காக மாணவர்கள் அனைவரையும் விளையாட்டு மைதானத்தில் நிறுத்தியிருந்தார்கள். பரிட்சை முடிவுக்காககூட இங்ஙனம் காத்திருந்ததில்லை அது தான் எழுதும் போதே தெரிந்து விடுமே
மைதானம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த என்னை ராஜ் ஸார் கூப்பிட்டார்.
“மிட்டாய் வாங்கி வைத்து விட்டாயா”
நான் நெளிந்தேன்
“முடிவு அறிவிக்கட்டுமே ஸார்”
“நீ தான் ஜெயிப்பே! வாங்கி வா” என்றார்
பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வைத்துக்கொண்டு மைதானத்திற்கு ஓடினேன்.
நான்கு விதமான குரூப்புகள் இருந்தன எங்கள் பள்ளியில்
ரோஸ். லோட்டஸ், ஜாஸ்மின், சன்ஃப்ளவர்
தேர்தல் இக்குரூப்புகளின் தலைவர்களுக்கும், உபவுக்கும் நடந்து இருந்தன. வாக்கெடுப்பின் ரிஸல்ட் சொல்லி(க்) கொண்டிருந்தார் பிரிண்ஸிபால். அஸிஸ்டெண்ட் எஸ்.பி.எல் கூட சொல்லியாகிவிட்டது.சூரஜ் ஜெயித்திருந்தான்.
இதோ அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த எஸ்.பி.எல் முடுவு மட்டும் தான் பாக்கி. மற்ற முடிவுகளுக்கான கைத்தட்டல்கள் ஓய்ந்து இருந்தன.
15 நிமிடங்களாக ரிஸல்ட்டுகளை அறிவித்து கொண்டிருந்த பிரிண்ஸிபால், சற்றே தலை நிமிர்ந்தார் கண்ணாடியின் இடைவெளியில் எங்களை நோக்கினார். நான் ஏதோ ஒரு வரிசையின் பின்னால் பதட்டத்துடன் …
Sunday, May 13, 2012
Thursday, December 8, 2011
Monday, October 17, 2011
பதிவுலக தோழமைகளே
அன்பு பதிவுலக தோழமைகளே இந்த கோரிக்கையை உங்களிடமும் வைக்கிறேன்.
சாதி, சமயங்கள், கட்சிகள், நிறங்கள் தாண்டி மொழி கொண்டு நாம் ஒன்றாக நடைப்போட்டு கொண்டிருக்கிறோம். சின்ன சின்னதாக புரிதல்களில் அங்கங்கே அவ்வப்போது தென்பட்டாலும் நாம் கொண்ட இணைய நட்புக்கு பங்கம் வந்ததில்லை. பதிவின் மூலமாக அறிமுகமாகி சகோதரன், சகோதரி, மாமன், மச்சான் என்ற உறவே இங்கே பலமாக இருக்கின்றது, பதிவுலகை விட்டு வெளியாக பல காலங்கள் ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் உண்டு, இது வரை முகம் காணாத சொந்தங்கள் இங்கு நிறைய உண்டு. எனக்கு அதிகம் எழுத தெரிந்ததில்லை ஆனால் பலரோடு நட்பு கொண்டிருக்கிறேன் இந்த இணைய உலகத்தில்.
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேல் தமிழ்மணத்தில் இணைந்ததில்லை, இன்று வரை தமிழ்மணம் முகப்பை பார்த்து பதிவுகளுக்கு செல்வதில்லை, எப்பொழுதுமே கூகில் ரீடரில் படித்து தான் பதிவுகளுக்கு செல்வதுண்டு, இந்த ஓட்டு, ஓட்டு பட்டை இதன் மீதான துவக்க மோகம் எப்பொழுதோ சென்று விட்டது. எல்லா திரட்டிகளுமே வியாபார நோக்கம் கொண்டதாகத்தான் நான் நினைக்கின்றேன், ஆனால் எல்லா ப்லாக்குகளும் அங்கனம் கிடையாது. ஓட்டு பட்டை இணைப்பிதில் நிச்சியம் திரட்டிகளுக்கே இலாபம் அதிகம், பதிவர்களுக்கு பிரபலம் மட்டுமே கிடைக்கின்றது, ஓட்டு பட்டை இல்லாமலும் அதை அடைய முடியும்.
தமிழ்மணம் இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது, அது அவர்கள் இஷ்டம் - அவர்களின் கட்டுப்பாடுகளோடு தொடர்வதும் தொடராமல் இருப்பதும் நமது இஷ்டம்.
ஆனால், தனிமனித தாக்குதலோ ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களை தாக்கும் விதமாக பேசுவதோ ஒரு பொது தளத்திற்கு அழகல்ல.
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கொண்டுள்ளவர்களின் மனம் புண்படும்படியாக தமிழ்மண நிர்வாகி நடந்துள்ளார். “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்பது யாரையும் புண்படுத்தாத முகமன் இதனை கேலிக்குள்ளாக்கியுள்ளார், மேலும் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது
-------------------------
சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.
இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.
அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).
இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.
தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.
------------------------
இது நான் தோழமையாக பாவிக்கும் எல்லோரிடமும் கேட்டு கொள்கிறேன், இது முஸ்லீம்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கருதாமல், உங்களுடைய எதிர்ப்புகளையும் பதிவு செய்யுங்கள்.
நன்றி.

Thursday, September 29, 2011
Saturday, July 23, 2011
Saturday, June 25, 2011
முதல்வரிடம் வேண்டுகோள் ...
குடி-மக்களுக்கு வசதி செய்ய எல்லா “கடை”களையும் ஒருங்கிணைத்து டாஸ்மாக் என்ற பெயரில் குடி-மக்களுக்கு சேவை செய்யும் தமிழக அரசு
எல்லா தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, அரசு மயமாக்கினால், ஏற்ற தாழ்வின்றி எல்லா மாணவர்களும் நல்லதொரு கல்வியை பெற்றிட ஏதுவாக இருக்கும் ...
செ(தி)ன்ற அரசு செய்யாத ஒன்றை இந்த அரசு செய்திட்டால் அவர்கள் கட்சிக்கும் நலம் தானே - செய்வார்களா தமிழக முதல்வர் ...

Monday, April 11, 2011
தமிழக தேர்தல் 18+
தமிழக தேர்தல், என்ன முடிவெடுப்பதென்றே தெரியாத நிலையில் தான் பலர் இருப்பதாக தெரிகின்றது.
சிறு சதவிகிதம் கூட நல்லவர்கள் தென்படவில்லை.
உள்ளதுலேயே குறைந்த அளவு கெட்டவர் யார் என்று யோசித்து ஓட்டு போடும் நிலையில் நாம்.
ரொம்ப வேதனையாக இருக்கு இந்த நிலை.
போட்டி போட்டு கொண்டு நல்லது செய்யக்கூடியவர் யாருமே இல்லை.
இன்றைய வாக்காளரின் நிலை யார் வர வேண்டும் தீர்மானம் செய்வதை விட யார் வரக்கூடாது என்று தீர்மானம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இந்த இலவசங்களை நினைத்தால் இன்னும் கடும் கோபமாக வருகின்றது, இதை நாம் ஏன் வேண்டாம் என்று சொல்வதில்லை – இதுவும் புரியவில்லை.
வாக்காளர்களை பிச்சைகாரர்களாக்கி தான் இவர்கள் ஆட்சியில் அமரவேண்டுமா? இது ஒரு பிழைப்பா.
எவ்வளவு கோபம் வந்தாலும் விரக்தி வந்தாலும், வாக்களிப்பது நமது உரிமை என்றல்ல கடமை என்று
யாவரும் ஓட்டு போடுங்கள்.
எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா (படிவம் 17 அ) இருக்கவே இருக்கு ‘49 ஓ’.
தற்பொழுதைய நிலை இந்த ‘49 ஓ’ பகிரங்கமாகத்தான் போட முடியும்.
நல்லதொரு புதிய கட்சி விரைவில் துவங்கட்டும் என்ற பிரார்த்தனையோடு …
-----------------------

Saturday, April 2, 2011
Saturday, March 5, 2011
கொள்(ளை)கை(யில்லா) கூட்ட(ம்)ணி
தேர்தல் கமிஷனுக்கு ஒரு வேண்டுகோள்
தேர்தல் நேரத்தில் கூட்டனி கூடாதுன்னு சட்டம் போடுங்க
தேர்தல் முடிந்த பின் அவர்கள் பேரம் வைத்து கொள்(ல்)ளட்டும்
அவர் அவர் பலம் அவர்களுக்கு தெரியட்டுமே
மேலும் மக்களுக்கு போட்டி போட்டு கொண்டு எதுனா நல்லது(?) செய்ய முயற்சி செய்வாங்க
தேர்தல் முடிந்த பின் பேரம் நடந்தால் ஒரு கட்சியே தொடர்ந்து ஆட்சியில் அமர முடியாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு
நல்லது செய்யாட்டியும், கெடுதலையாவது கொஞ்சமேனும் குறைத்து கொள்(ல்)ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்.
இது நடைமுறை சாத்தியமா என்றெல்லாம் தெரியாது
வாய்ப்பு இருந்தால் செய்யுங்களேன் ...

Friday, February 18, 2011
Saturday, February 5, 2011
Sunday, January 30, 2011
Thursday, November 4, 2010
ஏர்டெல் ரொம்ப நல்லவங்க :P
ரொம்ப நல்லவங்களாயிட்டாங்களோ ...
Dear Customer,
Thank you for writing to Airtel.
With reference to your e-mail dated 04/11/2010, you have expressed concern regarding balance deduction for your Airtel mobile number **************.
We regret the inconvenience caused in this regard.
We would like to inform you that the amount of Rs 10/- has been deducted towards LKD Subscription Service as on 04/11/2010.
At Airtel, we value our customers and regret their concerns. However, we assure you that, we shall take all necessary actions to ensure that the same is not repeated.
Adjustments:
The deducted balance towards LKD Subscription Service of Rs.10/- will be credited to account within 4 hours as on 04/11/2010.
Deactivation of Service:
The LKD Subscription Service will get deactivated instantly and also confirmation message will be sent on successful deactivation and you will not receive SMS from next day.
Further, to deactivate the Value Added Service we request you to dial *121# (Toll free) and the service will get deactivated within 4 hours and currently there is no Value Added Service active on your number.
We request you to check the below mentioned details to stop service messages receiving for your number :
Menu -- > Message -- > Message Settings -- > Info Service : Turnoff

Tuesday, October 26, 2010
தேடல்
எங்கே ’நீ’
வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
காடுகள்
மலைகள்
கூகிலில்கூட தேடிவிட்டேன்
எங்கும் இல்லை ’நீ’
தேடுகிறேன் தேடுகிறேன்
முட்டாளே உள்ளே தானே இருக்கேன் ’நான்’
என்று ’நீ’ ஓசை எழுப்பும் வரை
Subscribe to:
Posts (Atom)